ஐயோ கீழே இறங்குமா… போலீஸைப் பார்த்துக் கேலி செய்துவிட்டு… 5 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்த பெண்… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

நிர்மல் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து சங்கீதா என்ற பெண் கீழே குதித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. சாரங்காபூர் மண்டலம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கு ரவி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்பப் பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்த சங்கீதா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முதலில் வந்த காவல்துறையினர், கட்டிடத்தின் உச்சியில் நின்றிருந்த அவரைக் கீழே இறங்கி வருமாறு எச்சரித்தனர்.

   

https://twitter.com/TeluguScribe/status/2123000161827729721/video/1

   

ஆனால், காவல்துறையினரைப் பார்த்துக் கேலி செய்த சங்கீதா, திடீரென மாடியிலிருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.