திக்… திக்… பட்டப்பகலில் நடுரோட்டில் கோடரியால்… வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்… பின்னணி என்ன?… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 18, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கோத்ரி கிராமத்தில், நவம்பர் 17-ஆம் தேதி பட்டப்பகலில் சாலையில் வைத்து ஒருவர் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவர் ராகேஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ராகேஷ் யாதவ் தனது விதவை சகோதரிக்குச் சேர வேண்டிய 7 ஏக்கர் நிலத்தின் பங்கைக் கேட்டதால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலத் தகராறு முற்றிய நிலையில், உறவினர்களான லால் சிங் யதுவன்ஷி மற்றும் அவரது மகன் ஜிதேந்திரா ஆகிய இருவரும் சேர்ந்து ராகேஷைக் கோடரியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

https://twitter.com/muchatlu_/status/2122986757222519016/video/1

   

இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் தந்தையான லால் சிங்கை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த அவரது மகன் ஜிதேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.