இனி என்னால் தாங்க முடியாது… கண்ணீருடன் லைவ் போட்டு… உயிரை விட்ட பெண் தலைவர்… பின்னணியில் இருக்கும் அந்த இருவர் யார்?… ஜார்க்கண்ட் அரசியலை உலுக்கிய சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 17, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவரும் சமூக ஆர்வலருமான நிஷா குமாரி பகத் மரணம் குறித்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அஜய் திர்கி மற்றும் ஜோத்சனா கெர்கெட்டா ஆகிய இருவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 108 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் 6, 2026 அன்று ராஞ்சியின் பித்தோரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த நிஷா பகத், தனது மரணத்திற்கு முன்பு முகநூல் நேரலையில் தோன்றிப் பேசியிருந்தார். அதில், நில ஆக்கிரமிப்பு மாஃபியாக்கள், காவல்துறை மற்றும் மாநில அரசின் மெத்தனப் போக்கால் தனக்குத் தொடர்ந்து துன்புறுத்தல் ஏற்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

   

இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த நிஷா பகத்தின் பெற்றோர் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவினர் இதில் சதி இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அறிவிக்கையைத் தொடர்ந்து சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.