அட கடவுளே… நடுரோட்டில் நின்ற கார் மீது… தீடீரென விழுந்த ராட்சதப் பாறை… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!

By Swetha on கார்த்திகை 17, 2026

Spread the love

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லி கவுண்டி பகுதியில் ஒரு திகிலூட்டும் விபத்து நடந்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது, மலைச்சரிவில் இருந்து உருண்டு வந்த மிகப்பெரிய பாறை ஒன்று பயங்கர சத்தத்துடன் விழுந்து மோதியது.

இந்தப் பாறை காரின் பின்பகுதியில் மோதியதில், காரின் பின்பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தது. பாறை காரைத் தாக்குவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, ஒரு பெண்மணி அங்கிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த டேஷ்கேம் கேமராவில் பதிவாகியுள்ளன.

   

இவ்வளவு பெரிய விபத்து நடந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாகக் காரில் இருந்தவர்கள் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதிகளில் ஏற்படும் இத்தகைய திடீர் பாறைச் சரிவுகள் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.