சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் மாவட்டத்தில் உள்ள சிங்கௌலா கிராமத்தில், துணை வனச்சரகர் நீலகண்ட சாஹு மீது கரடி ஒன்று திடீரெனத் தாக்குதல் நடத்தியது. பாழடைந்த வீட்டிற்குள் புகுந்த கரடியை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலைமை கைமீறிச் செல்வதற்கு முன்பாக, அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தங்களின் துணிச்சலையும் சாதுரியத்தையும் வெளிப்படுத்தினர். அவர்கள் சத்தமிட்டுக் கரடியின் கவனத்தைத் திசைதிருப்பியதன் மூலம், வனத்துறை அதிகாரியைப் பாதுகாப்பாக மீட்டனர்.
https://twitter.com/sirajnoorani/status/2122220624445862246/video/1
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறைக் குழுவினர், அந்தக் கரடியைப் பாதுகாப்பாகப் பிடித்து மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
