இப்படியும் ஒரு கொடூரமா?… காதலி செய்த செயலால் ஆத்திரம்… வாயில்லா ஜீவன்களை பலிவாங்கிய இளைஞர்… நெஞ்சை உலுக்கிய சம்பவம்…!!

By Gayathri on கார்த்திகை 16, 2026

Spread the love

கொல்கத்தாவில் தனது முன்னாள் காதலி தன்னுடனான உறவை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார். காதல் முறிவால் ஏற்பட்ட பழிவாங்கும் எண்ணத்துடன், அந்தப் பெண் மிகவும் பாசமாக வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான நாய்களை அந்த நபர் ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்றுள்ளார். வாயில்லா ஜீவன்கள் என்றும் பாராமல், தனது கோபத்தை அந்த விலங்குகளின் மீது அவர் காட்டியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தனது இந்த மனிதாபிமானமற்ற செயலை அந்தப் பெண்ணிற்கு வீடியோ கால் மூலம் நேரடியாகக் காட்டி மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். தன் கண்முன்னே வளர்ப்பு நாய்கள் கொல்லப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.