ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி பள்ளி அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமி திடீரென மாயமானார். இரண்டு நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அவரது கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோட்டமொன்றின் புதர்களுக்கு இடையே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் இதற்கு முன்பு பத்து முறைக்கும் மேலாகத் தாங்கள் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை எனச் சிறுமியின் தந்தை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோப்ப நாய் படை மற்றும் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் துணையுடன் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
