கவிழ்கிறதா விஜய் ஆட்சி?…. “5 ஆண்டுகள் தாங்காது… 30 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி”…. செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி….!

By Nanthini on கார்த்திகை 16, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு அடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் வரை கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தீபாவளி பண்டிகை அன்று நிகழ்ந்த கொலைச் சம்பவங்களே இதற்கு சாட்சியாகும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தவறு செய்த சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் விஜய் கடுமையாக தண்டிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு சமாதானப்படுத்தப்படுவதாகவும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடியுள்ள செல்லூர் ராஜு, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இந்த ஆட்சிக்கு எதிராகப் பிரதமர் மோடி விரைவில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் கூறினார். அதிமுகவின் தரப்பில் இந்த ஆட்சிக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வருவதாகவும், இனி தமிழக அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.