ஐயோ… காப்பாத்துங்க… அப்பார்ட் மெண்டிற்குள் நடந்து சென்ற பெண்ணை… கடித்துக் குதறிய குரங்கு… நெஞ்சை உறைய வைக்கும் CCTV காட்சி…!

By Swetha on கார்த்திகை 16, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வதோதராவில் குடியிருப்பு வளாகத்திற்குள் பெண் ஒருவரை குரங்கு கொடூரமாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சானி ஜகாத்நாகா பகுதியில் உள்ள இன்பினியம் பிளாட்ஸ் குடியிருப்பு வளாகத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காலை நேரத்தில் குடியிருப்பு வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஆக்ரோஷமாக வந்த குரங்கு ஒன்று வழிமறித்துப் பலமுறை கடித்துக் குதறியது. இதில் உடலின் பல்வேறு பகுதிகளில் ஆழமான காயங்களுடன் படுகாயமடைந்த அந்தப் பெண்ணை, அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

   

https://twitter.com/CNNnews18/status/2121874947354292295/video/1

   

இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி குடியிருப்புவாசிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வரும் குரங்குத் தொல்லையால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறி, பொதுமக்கள் வனத்துறையிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்தக் குரங்கு கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது.