சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு பயிலும் மூத்த மருந்தியல் துறை மாணவர்களுக்கும், இளைய பொருளாதாரத் துறை மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கைகலப்பாக மாறியுள்ளது. இந்தச் சண்டையின்போது, முகமூடி அணிந்திருந்த மூத்த மாணவர்கள் சிலர் வெளியாட்களையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அழைத்து வந்து இளைய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் இளைய மாணவர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.