ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமியைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், சிறுமியின் தந்தை முகமது மஹ்பூப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றவுடன் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வெறும் 45 நிமிடங்களுக்குள் சிறுமியைக் கண்டுபிடித்தனர்.
https://twitter.com/pulsenewsbreak/status/2120928464647930232/video/1
பின்னர், சிறுமியைப் பாதுகாப்பாக மீட்ட காவல்துறையினர், அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தங்களது மகளை விரைவாகச் செயல்பட்டுப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்குச் சிறுமியின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
