கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் ஒன்றில், தனது நண்பருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்ட பெண்ணுக்கு அந்தத் தொழிலாளி மனிதாபிமான அடிப்படையில் தனது செல்போனைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்தச் சிறிய உதவி அவருக்குப் பெரிய விபரீதமாக மாறியது. பின்னர் அந்தப் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரையே கொலை செய்துவிட்டதாகக் கூறி காவல்துறையினர் அந்தத் தொழிலாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட மஞ்சு என் என்ற அதே பெண் இந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி உயிருடன் திரும்பி வந்துள்ளார். இதன் மூலம், காவல்துறையினரின் விசாரணையில் இருந்த மிகப்பெரிய குளறுபடிகளும் கவனக்குறைவும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
