மாணவர்களுக்கு ஜாக்பாட்!… ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் ‘சூப்பர்’ சைக்கிள்… களம் இறங்கும் பிரபல நிறுவனம்… தமிழக அரசு செய்த மெகா மாற்றம்…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

தமிழக அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்களை வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பின்படி, பாதுகாப்பு தலைக்கவசம் மற்றும் குடிநீர் பாட்டில் வைக்கும் வசதிகளுடன் கூடிய இந்த நவீன சைக்கிள்களைக் கொள்முதல் செய்வதற்காக 276.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான சைக்கிள்களைத் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த நிறுவனங்களுடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் தலைமையிலான 11 பேர் கொண்ட கொள்முதல் குழு 9 கட்டங்களாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.7,235-ம், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.7,476-ம் ஹீரோ நிறுவனம் நிர்ணயித்திருந்தது; ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவில் கணிசமான விலைக்குறைப்பிற்குப் பிறகு முறையே ரூ.5,260 மற்றும் ரூ.5,130 என்ற விலையில் வழங்க அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

   

இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 2,37,133 மாணவர்கள் மற்றும் 2,95,255 மாணவிகள் என மொத்தம் 5.32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நவீன சைக்கிள்களைப் பெற்றுப் பயன்பெற உள்ளனர். விலைக் குறைப்பு உடன்பாட்டைத் தொடர்ந்து, ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு முறைப்படியான கொள்முதல் ஆணையை வழங்குவதற்கு அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.