தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், மகளிர் அணியினர் அந்தப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து, கரும்புத் தடிகளால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
https://www.instagram.com/reel/Dfq9qNXu5Kf/?utm_source=ig_web_button_share_sheet
இப்பகுதியில் நடக்கும் இத்தகைய செயல்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்களே நேரடியாகத் தலையிட்டதாக சிவசேனா மகளிர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
