ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும் 7 வயது மகள் நந்தினி ஆகியோர், கடந்த 6-ஆம் தேதி காலை 8:30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். தான் பணிபுரியும் வீடுகளில் சம்பளப் பணத்தைப் பெற்று வருவதாகக் கணவரிடம் தெரிவித்துவிட்டு, தனது மகளையும் உடன் அழைத்துச் சென்ற சுகுணா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் தெரிந்த இடங்களில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சுரேஷ் நாகோல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாயமான தாய் மற்றும் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
