“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் பிரபல நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்பிலான கொள்ளை, காஞ்சிபுரத்தில் ரூ.1.5 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை, விழுப்புரம் மற்றும் நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பு, திருவாரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல்வர் விஜய் சட்டம் – ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் நேரத்திலேயே இத்தகைய குற்றங்கள் அரங்கேறுவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

தேர்தல் மேடைகளில் ‘நல்லதே நடக்கும்’ எனப் பேசிய வசனங்கள் பொதுமக்களுக்காகவா அல்லது குற்றவாளிகளுக்காகவா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா கேமரா முன்பு மட்டும் ‘ஆக்‌ஷன்’ காட்டாமல், முதலமைச்சர் தனது மௌனத்தைக் கலைத்து, குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.