திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

By Swetha on கார்த்திகை 13, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21 வயது இளம்பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 8-ஆம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், காதல் விவகாரம் குறித்து மகள் சான்யா படேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தந்தை கௌஷல் படேல், ஆத்திரத்தில் அவரது துப்பட்டாவாலேயே கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலையை மறைப்பதற்காக, சான்யாவின் மரணத்தைத் தற்கொலை அல்லது இயற்கைக்கு மாறான மரணம் எனக் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சித்தரிக்க முயன்றனர். ஆனால், மருத்துவர்களின் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட தடயவியல் பிரேதப் பரிசோதனையில், அவர் கழுத்து இறுக்கப்பட்டதால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

   

https://twitter.com/IndiaToday/status/2120738085977907634/video/1

   

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தனது மகளைக் கொலை செய்ததை கௌஷல் படேல் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 103(1)-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.