எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் ஹர்தோய் அருகே உள்ள கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கார் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த டிவைடரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் முற்றிலுமாகச் சுக்குநூறாக நொறுங்கியது.

   

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சௌரப் உபாத்யாய் (40), அவரது மனைவி மேனகா (35) மற்றும் அவர்களின் மகன்களான வோம் (7), சிவம் (18 மாதக் குழந்தை) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாய் தூஜ் மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களுக்காகத் தங்களது சொந்த ஊருக்குச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.