அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விளிம்புநிலை மாணவர்களின் உயர்கல்வி எந்தவிதத்திலும் தடைபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

   

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பில் தொடங்கி 12-ஆம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 முதல் 60 சதவீத மதிப்பெண்களைப் பெறுவது அவசியமாகும்.

   

இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நவம்பர் 25, 2026 வரை நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தகுதியும் விருப்பமும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகள் வழியாக விரைந்து விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.