பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

By Nanthini on கார்த்திகை 12, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின் தகவல்படி, பனையூரில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் உட்படக் கட்சியின் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்கும் கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவர்களின் பதவியைப் பறிப்பதற்காகவே இத்தகைய முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவெளியில் சர்ச்சைகளில் சிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கட்சித் தலைமை தரப்பில் நேரடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.