அம்மடியோ… என்ன இது?… மதுக்கடையில் புகுந்து ஃபுல் போதையில்… மயங்கி விழுந்த ரக்கூன்… ஒரே நாளில் குவிந்த ரூ 2.3 கோடி… இணையத்தில் வைரலாகும் அதிசய சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 12, 2026

Spread the love

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மதுக்கடை ஒன்றிற்குள் நுழைந்து, மது அருந்தி மயங்கி விழுந்த ரக்கூன் விலங்கு, உள்ளூர் விலங்குகள் காப்பகத்திற்கு சுமார் ரூ. 2.34 கோடி நிதி திரட்ட உதவியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘பிளாக் ஃபிரைடே’ விடுமுறை நாளில், ஆஷ்லேண்ட் பகுதியில் உள்ள மதுக்கடையின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்த அந்த ரக்கூன், அங்கிருந்த 14 மதுபாட்டில்களை உடைத்து அதில் இருந்த மதுவை அருந்தியுள்ளது. போதை தலைக்கேறியதால் கடையின் கழிவறைத் தரையில் மயங்கிக் கிடந்த அந்த ரக்கூனைக் கடை ஊழியர்கள் கண்டறிந்து விலங்குகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கழிவறையில் மயங்கிக் கிடந்த ரக்கூனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் வைரலாயின. இதனைத் தொடர்ந்து, அந்த ரக்கூனை மீட்டுப் பாதுகாப்பாகக் காட்டில் விட்ட ஹனோவர் கவுண்டி விலங்குகள் பாதுகாப்பு மற்றும் காப்பகம், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ட்ராஷ்டு பாண்டா’ என்ற பெயரில் நிதி திரட்டும் பிரச்சாரத்தையும், நினைவுப் பொருட்கள் விற்பனையையும் தொடங்கியது. ரக்கூனின் இந்த வேடிக்கையான செயலால் ஈர்க்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்கியதன் மூலம், ஓராண்டில் சுமார் ரூ. 2.34 கோடி நிதி குவிந்துள்ளது.

   

இந்த நிதியின் பெரும்பகுதி, விலங்குகள் வன்கொடுமை வழக்குகளை முறையாக ஆவணப்படுத்தவும், அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிதாக ‘பாடி கேமராக்கள்’ வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், மீதமுள்ள தொகை காப்பகத்தில் உள்ள விலங்குகளுக்குப் புதிய தங்குமிடங்கள், விளையாட்டுப் பொருட்கள், வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட உணவு சேமிப்பு அறை மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவு வங்கி ஆகியவற்றை அமைக்கச் செலவிடப்படும் எனக் காப்பகத்தின் தலைமை அதிகாரி ஜெஃப்ரி பார்க்கர் தெரிவித்துள்ளார். ஒரு ரக்கூனின் எதிர்பாராத குறும்புத்தனம், இன்று நூற்றுக்கணக்கான ஆதரவற்ற விலங்குகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னதப் பணிக்குப் பேருதவியாக மாறியுள்ளது.