#BREAKING: “நேரடியாக என்னைச் சந்தியுங்கள்”…. தவெக MLA-க்களுக்கு CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் அசைன்மென்ட்…!

By Nanthini on கார்த்திகை 12, 2026

Spread the love

சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அந்தக் கூட்டத்தில், தங்களது தொகுதியிலோ அல்லது கட்சி ரீதியாகவோ ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால், எம்.எல்.ஏ-க்கள் உடனடியாகத் தன்னை நேரில் சந்திக்கலாம் என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னை நேரில் சந்திப்பதற்கு யாராவது தடையாக இருந்தால், அது குறித்துத் தயங்காமல் உடனடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன், மக்கள் பணியின் முக்கியத்துவத்தையும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ஆற்றக்கூடிய மக்கள் பணி மட்டுமே, அடுத்த தேர்தலில் அவர்களை மீண்டும் வேட்பாளராக நிற்க வைக்கும் என அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்கள் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.