திக் திக் திக்… நொடிப் பொழுதில் ஏமாந்த எமன்… மரணத்தின் பிடியில் இருந்து தப்பிய தம்பதி… இணையத்தை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

By Swetha on கார்த்திகை 11, 2026

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் சாலையில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ராட்சத இரும்புப் பெயர்பலகை திடீரென விழுந்தது. இந்த படுபயங்கர விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சாலையைக் கடக்க முயன்றபோது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கனமான பிடபிள்யூடி சைன்போர்டு வேரோடு சாய்ந்து அவர்கள் மீது நேராக விழுந்தது. இரும்பு போர்டு மொத்தமாக அவர்கள் மீது சரிந்த வேகம், பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் இருந்தது. விபத்தின் தீவிரத்தில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது.

   

https://twitter.com/RajuSharmajour1/status/2120410851454976070/video/1

   

இருப்பினும், பேரதிர்ச்சியாக அந்த தம்பதியினருக்கு ஒரு சிறிய கீறல் கூட ஏற்படாமல் அவர்கள் உயிர் தப்பினர். இரும்புப் பலகை விழுந்த அடுத்த நொடியே, அவர்கள் இருவரும் எவ்வித காயமுமின்றி அதில் இருந்து வெளியே வந்ததை பார்த்த அங்கிருந்த மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ‘விதி வலியது என்றாலும், ஆயுள் முடிவடையவில்லை என்றால் மரணத்தின் வாசலில் இருந்தும் தப்பிக்கலாம்’ என இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.