வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உருக்கமான பதிவு… அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் இளம் மருத்துவர் பிணமாக மீட்பு… நடந்தது என்ன…? குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2026

Spread the love

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடியா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் சர்க்கார் (28) என்பவர், கொல்கத்தாவில் உள்ள பிரபல என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-ல் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

   

அவரை உடனடியாக மீட்டு ஆர்.ஜி கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணத்திற்கு முன் அபிஜித் சர்க்கார் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “என்னால் இனி இதைத் தாங்க முடியாது” என்று பதிவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

   

ஆனால், அவரது குடும்பத்தினர் இதனைத் தற்கொலை என ஏற்க மறுத்து, அபிஜித் சர்க்கார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாகர்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அவர் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பது போன்ற பதிவுகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரது செல்போனைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.