“சுவரில் தெறித்த அழுக்கு சேறு… கதறி துடித்த தாய்…” தாயை காப்பாற்ற போராடி உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் இப்ராஹிம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அனிகேத் கதீக் (25). கடந்த தீபாவளி பண்டிகை இரவில், இவரது வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் அமன் ராய்க்வார் மற்றும் பிரேம் ஆகிய வாலிபர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனால் சாக்கடையில் இருந்த அழுக்குச் சேறு அனிகேத்தின் வீட்டுச் சுவரில் தெறித்துள்ளது.

இதனைக் கண்டு அனிகேத்தின் தாய் சுனிதா, வேறு இடத்தில் சென்று பட்டாசு வெய்யுங்கள் எனக் கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் சுனிதாவைத் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியால் மூன்று முறை சராமாரியாகக் குத்தியுள்ளனர். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மகன் அனிகேத், கொடூரர்களிடமிருந்து தாயைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

   

அப்போது அந்த வாலிபர்கள் அனிகேத்தின் இடுப்பு மற்றும் தொடையில் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அனிகேத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அமன் ராய்க்வார் மற்றும் பிரேம் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போபால் காவல்துறையினர், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.