யார்டா இந்த லாவண்டர் சேலை தேவதை?… ஒரே ஒரு வீடியோ… ஒட்டுமொத்த இணையத்தை… திரும்பிப் பார்க்க வைத்த செய்தி வாசிப்பாளர்…!

By Swetha on கார்த்திகை 11, 2026

Spread the love

WION செய்தி நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளரான பிஸ்லா தீக்ஷா, மெல்லிய லாவண்டர் நிற சேலையில் செய்தி வாசித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார். அவரது நேர்த்தியான தோற்றம் மற்றும் கம்பீரமான செய்தி வாசிப்பு முறை எக்ஸ் தள பயனர்களைக் கவர்ந்ததால், அவர் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.

பிஸ்லா தீக்ஷா டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். இலக்கியம், கலை, கலாச்சாரம் மற்றும் கதைகூறல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்ட இவர், வன்முறை மற்றும் நினைவு ஆய்வுகள் சார்ந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

   

தற்போது WION தொலைக்காட்சியில் பணியாற்றுவதற்கு முன்பாக, அவர் கன்டென்ட் மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார். டீம்வொர்க் ஆர்ட்ஸ், மைனஸ் ஈக்குவல்ஸ் பிளஸ் மற்றும் ஸ்கொலாஸ்டிக் போன்ற முன்னணி நிறுவனங்களில் கன்டென்ட் எக்ஸிகியூட்டிவ் மற்றும் காபிரைட்டராகப் பணியாற்றியுள்ள அவர், பல இலக்கிய விழாக்களில் எழுத்தாளர்களின் கலந்துரையாடல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.