தமிழ்நாடு முழுவதும் விடிய விடிய நடந்த வேட்டை…. ஒரே நாளில் 6,967 பேருக்கு ஷாக் கொடுத்த போலீஸ்… கொத்து கொத்தாக ரவுடிகள் கைது….!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தீவிர அதிரடி வேட்டையில் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநிலம் தழுவிய அளவில் இந்தச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 6,967 சந்தேகத்திற்குரிய ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 6,540 ரவுடிகளுக்குக் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தேடுதல் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.