அதிரடியில் இறங்கிய முதலமைச்சர் விஜய்…. சர்ச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு நேரடி அழைப்பு…. துணை சபாநாயகர் மாற்றம்?…. திடீர் ட்விஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, துணை சபாநாயகர் ரவிசங்கரின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இச்சூழ்நிலையில், சோழவந்தான் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவைச் செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக வெற்றி பெற்ற கழகம் ஆட்சியமைத்தபோது தற்காலிக சபாநாயகராகச் செயல்பட்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் கருப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம், உட்கட்சி ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றி பெற்ற கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் குறித்து, அவர்களிடம் நேரடியாகவே பேசுவதற்கு முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.