மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் கிழக்கு பகுதியில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீப்பொறியால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. சாய்ராஜ் காலனி பகுதியில் சச்சின் சிங் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து கசிந்த பெட்ரோலை நிறுத்த முயன்று கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில், அருகில் வெடிக்கப்பட்ட பட்டாசில் இருந்து கிளம்பிய தீப்பொறி எதிர்பாராதவிதமாக அவரது ஆடைகளின் மீது விழுந்தது. பெட்ரோல் கசிவு காரணமாக அவரது சட்டையில் நொடிப் பொழுதில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆடை எரியும் நிலையிலேயே அலறியபடி சாலையில் ஓடினார்.
https://twitter.com/aajtak/status/2120114941697143123/video/1
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, எரியும் சட்டையை அவரது உடலில் இருந்து அகற்றி தீயை அணைத்தனர். பொதுமக்களின் இந்த உடனடி உதவியால் அவர் பெரும் காயங்களிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
