என் கூட வா… அழைத்த காதலன்… மறுத்த 4 மாத ஃபேஸ்புக் காதலியை… செங்கலால் அடித்துக் கொன்ற கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

காசியாபாத்தின் லோனி எல்லைப் பகுதியில் வசித்து வந்த 28 வயதான பிங்கி என்ற திருமணமான பெண்ணிற்கு, ஃபேஸ்புக் தளம் மூலமாக புலந்த்சாகரைச் சேர்ந்த பிந்து (33) என்ற நபருடன் 4-5 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் போன் மூலம் பேசும் அளவிற்கு நெருக்கமாக மாறியுள்ளது.

சம்பவத்தன்று பிந்துவைச் சந்திப்பதற்காக பிங்கி தனது சகோதரியுடன், பிந்து வாடகைக்கு எடுத்திருந்த அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அறைக்குள் பிங்கி மற்றும் பிந்து இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிந்து, அங்கிருந்த செங்கலை எடுத்து பிங்கியின் தலையில் பலமுறை கொடூரமாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

   

அறைக்கு வெளியே காத்திருந்த பிங்கியின் சகோதரி சத்தம் கேட்டு அலறியுள்ளார். அப்போது பிந்து தனது பையை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றபோது, அப்பகுதி பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து பிடித்தனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த காசியாபாத் போலீஸார் கொலையாளி பிந்து மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் ஆர்யன் குப்தா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.