ஐயோ கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தின் நடுவே… 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… கோவாவில் மக்கள் போராட்டம்… நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

கோவாவின் மாபுசா பகுதியில் உள்ள லோஹியா மைதானத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில், தீபாவளி பண்டிகை அன்று இரவு 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பலூன் விற்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மாபுசா காவல்துறையினர், குற்றவாளியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் திங்கள்கிழமை மதியத்திற்குள் சிலரைத் தடுத்து வைத்துக் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க சுமார் 40 போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வட கோவா எஸ்பி ராகுல் குப்தா தெரிவித்துள்ளார்.

   

இந்த கொடூரமான சம்பவத்திற்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய அரக்க குணம் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்கக் கூடாது என்றும், குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், கோவா பழங்குடியின நலத்துறை அமைச்சர் ரமேஷ் தவாட்கர், மாநிலத்தில் நடக்கும் இதுபோன்ற குற்றங்களில் 90% “வெளிமாநிலத்தவர்களால்” தான் செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.