“எல்லாத் தொகுதியிலும் நான்தான் விஜய்”…. வாக்கு கேட்ட தளபதிக்கு நடிகை கஸ்தூரி வைக்கும் செக்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

தேர்தல் பிரச்சாரத்தின் போது “எல்லாத் தொகுதிகளிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள்” என்று நடிகர் விஜய் முழக்கமிட்டதைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியின் வெற்றிக்குப் பிறகு எழும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என நடிகை கஸ்தூரி காட்டமாகத் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கட்சியின் எம்.எல்.ஏக்கள் மீது அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து வரும் நிலையில், அதற்கெல்லாம் தலைவர் விஜய்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதைக் கேட்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும், அவர்கள் விஜய்க்கான டப்பிங் குரல்கள் அல்ல என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பது குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறுவது குறித்தும் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள கஸ்தூரி, “எந்தப் பிரச்சினை என்றாலும் முதல்வர் கண்டுகொள்ள மாட்டார், அவர் பாட்டுக்குச் சுற்றுகிறார் என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்; எனவே விஜய் சார், இனியாவது இதில் கவனம் செலுத்துங்கள்” எனத் தன் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.