தேனி டி.எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், தனது பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு குழுவினர் பொதுச் சாலையில் பட்டாசுகளை வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதைக் கண்டுள்ளார். உடனடியாக அவர்களைச் சாலையை விட்டு விலகுமாறு கூறிய செந்தில்குமார், தனது செல்போனில் அவர்களின் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் குழு செந்தில்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது அக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எஸ்.எஸ்.ஐ செந்தில்குமாரின் நெஞ்சுப் பகுதியில் கை முட்டியால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
