சிரித்துப் பேசியதே குற்றமா?… கள்ளக்காதலனின் வெறிச்செயல்… துடிதுடிக்க நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கிய பகீர் பின்னணி….!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான மணிமேகலை என்ற 3 குழந்தைகளின் தாய், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். தேர்வாய்கண்டிகை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துர்கா பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமான நட்பாக மாறியது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மணிமேகலை அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததோடு, தான் பணிபுரியும் இடத்தில் உள்ள மற்றொருவருடன் நட்பாகப் பழகியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமும் சந்தேகமும் அடைந்த துர்கா பிரசாத், மணிமேகலையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். மணிமேகலையை நேரில் சந்தித்து ஆசைவார்த்தை கூறி, தனது இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள சென்றான்பாளையம் காப்புக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆள்நடமாட்டமற்ற தனிமையான இடத்தில் வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையைத் தாக்கி, அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

   

ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த மணிமேகலையைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெண்ணாலூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த துர்கா பிரசாத்தைக் கைது செய்து, இக்கொலைக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.