அம்மாடியோவ்… என்ன கொடுமை இது?… காயம் பட்டு ரத்தம் வர்ற வரைக்கும் கல் வீச்சு!… தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் அதிர்ச்சி சடங்கு… இணையத்தில் நெட்டிசென்கள் ஷாக்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

இமாச்சலப் பிரதேசம், சிம்லா அருகே உள்ள தாமி கிராமத்தில், ‘பத்தர் கா கேள்’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய கல் வீசும் திருவிழாவைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். தீபாவளிக்கு அடுத்த நாள் ஆண்டுதோறும் இந்த வினோதமான சடங்கு நடத்தப்படுகிறது.

இந்த வழிபாட்டின் போது, கிராம மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, பங்கேற்பாளர் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்படும் வரை பரஸ்பரம் கற்களை வீசிக் கொள்கிறார்கள். அவ்வாறு காயம் அடைந்த நபரின் சில துளி இரத்தம் பின்னர் பத்ரகாளி அம்மனுக்குப் பிரசாதமாக அர்ப்பணிக்கப்படுகிறது.

   

https://twitter.com/CNNnews18/status/2119808116548395274/video/1

   

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரியம், முற்காலத்தில் தெய்வத்தை மகிழ்விக்கவும், நோய்கள் மற்றும் இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பின்பற்றப்பட்ட மனிதப் பலி கொடுக்கும் பழக்கத்திற்கு மாற்றாக உருவானதாக நம்பப்படுகிறது.