குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிர் கதடா தாலுகாவிற்கு உட்பட்ட உன்றி கிராமத்திற்குள், தீபாவளி பண்டிகை அன்று இரவு ஒரு பெண் சிங்கம் தனது இரு குட்டிகளுடன் நுழைந்தது. குடியிருப்புப் பகுதிக்குள் இந்த சிங்கக் குடும்பம் திடீரென வந்ததால், அங்கிருந்த கிராம மக்கள் பெரும் பீதியடைந்தனர். மேலும், சிங்கங்களைக் கண்டு அங்கிருந்த கால்நடைகள் அனைத்தும் மிரண்டு ஓடி அலறின.
இந்த பரபரப்பான சூழலில், கிராமத்திற்குள் புகுந்த அந்த பெண் சிங்கம் அங்கிருந்த ஒரு பசுவையும் கன்றுகுட்டியையும் அடித்துக் கொன்றது. சிங்கம் நடமாடும் இந்த ஒட்டுமொத்த காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.
https://twitter.com/aajtak/status/2119766608499691744/video/1
சமீபகாலமாக தங்கள் கிராமத்தில் சிங்கங்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உன்றி கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
