திடீர் பரபரப்பு…. ரஜினி, சிவகார்த்திகேயன் பட வாய்ப்பு தருவதாகக் கூறி மோசடி…. ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம், தங்கள் பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் திரை வாய்ப்பு மோசடிகள் குறித்து அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்நிறுவனம் ரஜினிகாந்தின் ‘தர்மன்’, சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இத்திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி சில மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிறுவனம் தனது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனத் திரைப்படங்களுக்காக எந்தவொரு அதிகாரப்பூர்வ காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் எந்தவொரு செய்தியையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும், நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.