துணை சபாநாயகர் விவகாரம்… கடுப்பான முதல்வர் விஜய்….. பனையூரில் அவசர மீட்டிங்… யாருக்கெல்லாம் ஆப்பு?…. இன்று காத்திருக்கும் டுவிஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் மற்றும் தவெக எம்.எல்.ஏ ரவிசங்கர் மீதான சர்ச்சை, மாநிலத்தில் அரசியல் ரீதியாகப் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 11-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகச் சில எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் பல்வேறு பொதுச் சர்ச்சைகளில் சிக்குவதும், உள்கட்சியில் தலைதூக்கியுள்ள பூசல்களும் தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக் களைவதற்காகவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிகிறது.

   

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் நேரில் பங்கேற்கவுள்ளார். அப்போது, பொதுவெளியிலும் தொகுதி மக்களிடமும் கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனப் புகாருக்குள்ளான மக்கள் பிரதிநிதிகளுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை (“வார்னிங்”) விடுக்கவுள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதால், இக்கூட்டம் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.