அட இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்களே…. “த்ரிஷாவுக்கு திருமணமே கிடையாதா?”…. ஜோதிடரின் பகீர் கணிப்பைக் கேட்டு ஷாக்கில் ரசிகர்கள்….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கு தொலைக்காட்சித் துறை சார்ந்தவருடன் திருமணம் நடக்கும் என்று துல்லியமாக கணித்த பெண்மணி ஒருவர், தற்போது நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்தும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பெண்மணி வெளியிட்ட வீடியோவில், த்ரிஷா தனது தற்போதைய திரை வாழ்க்கை நிலையிலேயே தொடர்ந்து பயணிப்பார் என்றும், எதிர்காலத்தில் அவர் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பே இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை த்ரிஷா ஏற்கனவே உறுதியாக எடுத்துவிட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலால் அதிர்ச்சியும் சுவாரஸ்யமும் அடைந்த த்ரிஷாவின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் கலகலப்பான விவாதங்களைத் தொடங்கிவிட்டனர். “அப்போ மாப்பிள்ளை நாங்க கிடையாதா?” என்று நகைச்சுவையாகவும் நமுட்டுச் சிரிப்புடனும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். திரையுலகில் இன்றும் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷாவின் திருமணம் குறித்த இந்த புதிய கணிப்பு, தற்போது இணையத்தில் தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.