தீபாவளி கொண்டாட்டம் நொடியில் கண்ணீராக மாறிய சோகம்…. மார்பில் வெடித்த பட்டாசு…. 10 வயது சிறுவன் பரிதாப பலி….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

டெல்லி நரேலா பகுதியில் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கோர விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி இரவு தன் வீட்டின் முன்பு சிறுவன் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றிய பட்டாசு வெடித்து அவனது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவன், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எவ்வுளவு அவசியம் என்பதை இப்பேரிடப்பு உணர்த்துவதாக அப்பகுதி மக்களிடையே பெரும் சோகம் நிலவுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், மருத்துவமனையின் அலட்சியமே சிறுவனின் இறப்புக்குக் காரணம் எனவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இத்தீபாவளி பண்டிகையின் போது டெல்லி தீயணைப்புத் துறைக்கு நூற்றுக்கணக்கான அவசர அழைப்புகள் வந்த போதிலும், சிறுவன் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.