“அரசியலுக்கு வரமாட்டேன்… ஆனா”… மௌனம் கலைத்த நடிகர் சூர்யா…. ரசிகர்கள் அதிர்ச்சி….!

By Nanthini on கார்த்திகை 9, 2026

Spread the love

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் தற்போதைய அரசியல் சூழல்களைத் தான் மௌனமாக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். வழி தெரியாமல் அவசரமாக அரசியல் களத்திற்குள் கால்பதிக்க மாட்டேன் என்றும், முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபட முடிந்தால் மட்டுமே அதில் இறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என்பதற்காக தான் அதனை வெறுப்பதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க கல்விதான் அடிப்படையான ஆயுதம் என்பதை நடிகர் சூர்யா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வெறும் வாய் வார்த்தைகளால் மாற்றம் வரும் என்று கூறுவதில் பலனில்லை என்றும், மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியலுக்கு வர விரும்பும் இளைஞர்கள் அதன் சவால்களையும், கஷ்ட-நஷ்டங்களையும் முழுமையாகப் புரிந்து கொண்டு களமிறங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.