அம்மா… என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க… போன் செய்த அடுத்த நாளே புதுப்பெண் சடலமாக மீட்பு… வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த பயங்கரம்…!

By Swetha on கார்த்திகை 9, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணம் ஆகி வெறும் 9 மாதங்களே ஆன நிலையில் 30 வயது பெண் ருச்சி மிஷ்ரா தனது புகுந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரது கணவர், ருச்சியின் குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2026 பிப்ரவரி மாதம் சீசாமாவ் பகுதியைச் சேர்ந்த கோபால் மிஷ்ரா என்பவருடன் ருச்சிக்கு திருமணம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ருச்சியின் தாய், தனது மகளின் நிறத்தைக் குறை கூறி கணவர் அடிக்கடி கேலி செய்ததாகவும், அவரைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு ருச்சி தனது தாயைத் தொடர்பு கொண்டு, “அம்மா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடுங்கள், இவர்கள் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று அழுது புலம்பியதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

   

ருச்சியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அது கொலை மற்றும் வரதட்சணைக் கொடுமை என அவரது குடும்பத்தினர் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முறையான புகார் அளிக்கப்பட்டதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.