ஐயோ கொடுமையே… கர்ப்பிணி மனைவியைக் கொன்று… கோதாவரி ஆற்றில் வீசிய காவலர்… ஒரு நாள் முழுவதும் சடலத்துடன் வீட்டில் இருந்த அதிர்ச்சி பின்னணி…!

By Swetha on கார்த்திகை 8, 2026

Spread the love

பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் தேகுலபள்ளி மண்டலத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நரேந்தர், சமூக ஊடகம் மூலம் பழகிய முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கொத்தகுடெமில் உள்ள பிரகதி நகரில் வசித்து வந்த இந்தத் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக காவலர் நரேந்தர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை அவரே கொலை செய்து, உடலை கோதாவரி ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

   

இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை ஆற்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் மூலம் பவானியின் உடல் பர்கம்பாடு மண்டலம் கும்முரு அருகே கண்டெடுக்கப்பட்டது. எனினும், நரேந்தர் செவ்வாய்க்கிழமையே தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, ஒரு நாள் முழுவதும் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்ததாகத் தற்போதைய முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.