தற்கொலையா? திட்டமிட்ட கொலையா?… குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட மனைவியின் உடல்… நீதிமன்றத்தில் கணவன் உடைத்த பகீர் ரகசியம்…!!

By Gayathri on கார்த்திகை 7, 2026

Spread the love

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வந்த மம்தா காஃப்லே பட் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், தம்பதியினர் வசித்த வீட்டில் ரத்தக் கறைகள் உள்ளிட்ட பல சந்தேகத்திற்கிடமான தடயங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரது கணவர் நரேஷ் பட்டை கைது செய்தனர். நீண்ட காலமாக மம்தாவின் உடல் மீட்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது நீதிமன்ற விசாரணையின் போது நரேஷ் பட் தனது மனைவியின் உடலைத் துண்டுகளாக்கியதை ஒப்புக்கொண்டு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நரேஷ் பட், மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, மம்தா விஷம் அல்லது அதிக மாத்திரைகளை உட்கொண்டு வாந்தி எடுத்த நிலையில் அசைவற்று கிடந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவரை உயிர்ப்பிக்க முயன்றும் பலனளிக்காததால், கடும் பயம் மற்றும் பதற்றத்தின் காரணமாக அவசர உதவி எண்ணை அழைக்காமல் உடலை மறைக்க திட்டமிட்டதாகக் கூறியுள்ளார்.

   

முழு உடலையும் குப்பைப் பையில் அடைக்க முடியாததால், வீட்டில் இருந்த வெட்டும் கருவியைக் கொண்டு உடலைத் துண்டுகளாக்கி பல பைகளில் அடைத்துக் குப்பையில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டின் படுக்கையறை மற்றும் குளியலறையில் கிடைத்த ரத்தக் கறைகள் மற்றும் கருவிகளில் இருந்த தடயங்களை அடிப்படையாகக் கொண்டு, முதல் நிலைக் கொலை மற்றும் உடலைச் சிதைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அரசுத் தரப்பு வழக்கை தீவிரமாக நடத்தி வருகிறது. மம்தாவின் உடல் இதுவரை கிடைக்காத சூழலில், நரேஷ் பட்டின் இந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்குமா என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும்.