வயிற்று வலியால் துடித்த 12-ஆம் வகுப்பு மாணவி… மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. 22 வயது பொறியியல் மாணவர் செய்த உச்சக்கட்ட கொடூரம்…!

By Nanthini on கார்த்திகை 7, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த மாணவியை அவரது தாயார் உடனடியாக அருகில் உள்ள கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் கூற்றைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், இதுகுறித்து மகளிடம் விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த பிஜோ தியோ (22) என்ற இளைஞர், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறித் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வரும் பிஜோ தியோவிற்கு, ஊர் கோவில் திருவிழாவின்போது அம்மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

   

தொடர்ந்து செல்போன் மூலம் பேசி நெருக்கம் காட்டி வந்த பிஜோ தியோ, கல்லூரி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது மாணவியைச் சந்திக்க முயன்றுள்ளார். மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, மாடிக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகள் கூறிப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பலமுறை அம்மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததால் மாணவி கர்ப்பமடைந்தது தெரியவந்துள்ளது.

   

இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து பொறியியல் மாணவர் பிஜோ தியோவைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.