கணவன் கண் முன்பே நடந்த கொடூரம்…. “அண்ணியை எரித்துக் கொன்ற கொழுந்தன்”…. தென்காசியில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்….!

By Nanthini on கார்த்திகை 7, 2026

Spread the love

தென்காசி அருகே உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் தகாத உறவை கைவிட மறுத்ததால், அப்பெண்ணை அவரது கணவனின் தம்பியே (கொழுந்தன்) தீவைத்து கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கொழுந்தன் தன் அண்ணியைத் தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இந்த அதிர்ச்சி வழக்கில் தற்போது கொல்லப்பட்ட பெண்ணின் கணவன், மாமியார் மற்றும் கொழுந்தன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குடும்ப உறவுகளுக்குள் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.