கையை பிசையும் சீமான்…. ஸ்டாலின், EPS கொடுத்த “நோ”…. அம்பாசமுத்திரத்தில் அதிர்ச்சி திருப்பம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 7, 2026

Spread the love

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் பொது வேட்பாளராகக் களமிறங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல் நகர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரிடம் ஆதரவு கோரி அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும், தற்போதைய அரசியல் சூழலில் பிற முக்கியக் கட்சிகள் சீமானுக்கு ஆதரவளிக்கத் தயக்கம் காட்டி முன்வரவில்லை என்ற செய்தி, நாம் தமிழர் கட்சியின் வியூகத்தில் தொய்வை ஏற்படுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியக் தலைவர்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதே நல்லது என நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சீமானுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது. இதனால், அடுத்தகட்ட முடிவை எவ்வாறு எடுப்பது என்ற குழப்பத்தில் கட்சித் தலைமை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனித்துப் போட்டியிட்டுப் பழகிய நாம் தமிழர் கட்சி, இந்தச் சவாலை எதிர்கொண்டு களத்தில் நிற்குமா அல்லது மூத்த நிர்வாகிகளின் விருப்பப்படி பின்வாங்குமா என்பதை சீமானின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே தெளிவுபடுத்தும்.