நள்ளிரவில் வந்த ஹேப்பி நியூஸ்…. ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்…. கணக்கில் தடாலடியாக ஏறிய ரூ.12,000…. அரசு கொடுத்த அதிரடி தீபாவளி கிஃப்ட்….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதியை முன் தேதியிட்டு, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களுக்கான நிலுவைத் தொகையாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு ஊழியருக்கும் தோராயமாக ரூ.12,000 வரை கூடுதல் பணப்பலன் கிடைத்துள்ளது.

ஏற்கனவே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 மாத கால நிலுவையுடன் கூடிய அகவிலைப்படி உயர்வும் சேர்ந்து கிடைத்திருப்பது EB ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தில் வந்து சேர்ந்துள்ள இந்த கூடுதல் பணவரவு, மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரிடையே மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.