நவம்பர் 15-ல் உருமாறும் அசுர புயல்.. இந்த மாவட்ட மக்களுக்கு ரெட் அலர்ட்?…. சென்னை, ஆந்திராவுக்கு ’முரசு’ ரேஞ்ச் ஆபத்து….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 15 அன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டல சுழற்சியானது அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து, கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்பதால் வானிலை ஆய்வாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ மற்றும் ‘முரசு’ புயல்களைப் போலவே, தற்போதைய இந்த புதிய புயல் சின்னமும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பரவலாகக் கனமழையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.