ஆற்றில் மூழ்கியது எப்படி?… சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்… 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்… மீட்பு படையினர் தீவிர தேடுதல்…!!

By Gayathri on கார்த்திகை 5, 2026

Spread the love

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள கங்கனானி பகுதியில், கர்மகுண்டிலிருந்து டப்ரானி செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையிலிருந்து விலகிய கார், சுமார் 20 மீட்டர் தொலைவு வரை சென்று ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், ஆற்றில் விழுந்த காரைச் சுற்றியுள்ள பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரின் அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், காரில் பயணம் செய்த மற்றவர்களின் நிலை என்ன என்பது குறித்து அறிய, அவர்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.